இந்தியா

மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு 27%, முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு: பிரதமர் மோடி பாராட்டு

29th Jul 2021 09:02 PM

ADVERTISEMENT

மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு 27%, முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் அரசின் மைல்கல் முடிவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அனைத்திந்திய தொகுப்பிலிருந்து இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்தது. மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கான இந்த இடஒதுக்கீடு 2021-22 கல்வியாண்டில் அமலுக்கு வரவுள்ளது. 

இதையும் படிக்கலாமே...பாம்பு கடித்து ஒரே வாரத்தில் 3 குழந்தைகள் பலி

இதுகுறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரையில், “நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மைல்கல் முடிவை நமது அரசு எடுத்துள்ளது. 
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் சிறந்த வாய்ப்புகளைப் பெறவும், நம் நாட்டில் சமூக நீதிக்கான புதிய முன்னுதாரணத்தை உருவாக்கவும் இது பெருமளவு உதவிகரமாக இருக்கும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : PMMODI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT