இந்தியா

மம்தாவுடன் பேசியது என்ன? கனிமொழி ட்வீட்

29th Jul 2021 06:17 PM

ADVERTISEMENT


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து உரையாடியதாக திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். இதன் பகுதியாக கனிமொழியை வியாழக்கிழமை சந்தித்தார் மம்தா பானர்ஜி.

இதையும் படிக்க | எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு யாா் தலைமை தாங்கினாலும் ஏற்கத் தயாா்: மம்தா பானா்ஜி

இந்த சந்திப்பு குறித்து கனிமொழி ட்வீட் செய்தது:

ADVERTISEMENT

"மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை சந்தித்துப்பேசியது மகிழ்வளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடினோம்."

Tags : Kanimozhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT