இந்தியா

‘மிசோரம் செல்ல வேண்டாம்’: அசாம் அரசு அறிவுறுத்தல்

29th Jul 2021 09:20 PM

ADVERTISEMENT

தொடரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சொந்த மாநில மக்களுக்கு அசாம் அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

 அசாம் - மிசோரம் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று மிசோரம் எல்லை கிராம மக்கள், காவல்துறையினர் மற்றும் அஸ்ஸாம் எல்லை கிராம மக்களுக்கு இடையே நடந்த மோதலில் அசாம் காவலர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையும் படிக்க | யூடியூப் வருமானத்திற்காக மாணவர்களை கண்டுகொள்ள மறுக்கின்றனரா ஆசிரியர்கள்?

ADVERTISEMENT

இந்நிலையில் இதுதொடர்பாக மாநில உள்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அசாம் - மிசோரம் மாநில எல்லைப் பகுதியான பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அசாம் மாநிலத்தின் காச்சர், கரிம்ஜங், ஹைலகண்டி ஆகிய மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநில மக்களின் சொந்த பாதுகாப்பிற்கு எழும் அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் மக்கள் மிசோரம் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கடல்வாழ் உயிர்களைக் காக்கும் 4 வயது சிறுமி: பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி அசத்தல்

பணி மற்றும் இதர நிமித்தங்களுக்காக மிசோரம் மாநிலத்தில் வசித்துவரும் அசாம் மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

Tags : Assam Mizoram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT