இந்தியா

புதிய காவல் துறை ஆணையரை திரும்ப பெற கோரும் தில்லி அரசு

29th Jul 2021 03:56 PM

ADVERTISEMENT

புதிய காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் அஸ்தானாவை திரும்பபெறக் கோரி தில்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரலாக இருக்கும் ராகேஷ் அஸ்தானா தில்லி காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

ஓய்வு பெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், புதிய காவல் துறை ஆணையரை திரும்ப பெற வேண்டும் என தில்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க | 

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, ராகேஷ் அஸ்தானாவின் நியமனத்திற்கு எதிராக தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு தீரமானம் நிறைவேற்றியுள்ளது. 

குஜராத்தைச் சேர்ந்த 1984ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா இம்மாதம் ஜூலை 31-ஆம் தேதி ஓய்வு பெற இருந்தார். அவருக்கு பொதுநோக்குடன் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு தில்லி காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.
 
எல்லை பாதுப்புப் படையில் தலைமைப் பொறுப்பேற்பதற்கு முன்பாக ராகேஷ் அஸ்தானா சிபிஐ சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி லாலு பிரசாதின் மாட்டுத் தீவன வழக்குகளைக் கையாண்டு அவர் சிறை செல்லக் காரணமாக இருந்தார்.
 

Tags : Delhi aam aadmi rakesh asthana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT