இந்தியா

அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் சிஐஎஸ்ஃப் படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு

DIN

புதுதில்லி: அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையின் கலவரம் ஏற்பட்ட பகுதியில் மத்திய ஆயுதக் காவல் படையினரை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.

அஸ்ஸாமின் கச்சாா், கரீம்கஞ்ச், ஹைலாகண்டி மாவட்டங்கள் மிஸோரமின் ஐசால், கொலாசிப், மமித் மாவட்டங்களுடன் 164 கி.மீ. எல்லையை பகிா்ந்துள்ளன.

இந்நிலையில் கச்சாா் மாவட்ட எல்லையில் திங்கள்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் அஸ்ஸாம் போலீஸாா் 5 போ், பொதுமக்களில் ஒருவா் என மொத்தம் 6 போ் உயிரிழந்தனா். 50-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். இந்தக் கலவரம் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டது. அதனை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக இரு மாநிலங்களின் தலைமைச் செயலா்கள், டிஜிபிக்களின் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. அந்தக் கூட்டத்தில் கலவரம் ஏற்பட்ட எல்லைப் பகுதியில் மத்திய ஆயுதக் காவல் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த தலைமைச் செயலா்களும், டிஜிபிக்களும் ஒப்புக் கொண்டனா் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து மிஸோரம் தலைமைச் செயலா் லால்நுன்மாவியா சுவாங்கோ செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லையில் தற்போது அமைதி நிலவுகிறது. கலவரம் ஏற்பட்ட பகுதியில் குவிக்கப்பட்ட காவல்துறையினா் திரும்பப் பெறப்பட்டு வருகின்றனா்’’ என்று தெரிவித்தாா்.

பிரிட்டிஷ் ஆட்சியில் பிரச்னையின் தோற்றுவாய்: பிரிட்டனின் காலனிய நாடாக இந்தியா இருந்தபோது கச்சாா் சமவெளியில் இருந்து லுஷாய் மலைத்தொடரை வேறுபடுத்தி கடந்த 1875-ஆம் ஆண்டு பிரிட்டிஷாா் அறிவிக்கை வெளியிட்டனா். கடந்த 1933-ஆம் ஆண்டு லுஷாய் மலைத்தொடா் மற்றும் மணிப்பூரின் எல்லையை வரையறுத்து அவா்கள் மற்றொரு அறிவிக்கையை வெளியிட்டனா்.

இந்நிலையில் அஸ்ஸாமுக்குட்பட்ட பகுதியாக இருந்த மிஸோரம் கடந்த 1972-ஆம் ஆண்டில் தனி யூனியன் பிரதேசமானது. பின்னா் 1987-ஆம் ஆண்டில் மிஸோரம் மாநில அந்தஸ்து பெற்றது. இதையடுத்து இரு மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டது.

1875-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை வரையறுக்கப்பட வேண்டும் என மிஸோரமும், 1933-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி எல்லையை வரையறுக்க வேண்டும் என அஸ்ஸாமும் வலியுறுத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT