இந்தியா

பெண்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேர உதவி எண் சேவை: மத்திய அமைச்சா் தொடக்கிவைத்தாா்

DIN

புதுதில்லி: நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பெண்களின் ஒட்டுமொத்த நலனை வலுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஏதுவாகவும் தேசிய மகளிா் ஆணையத்தின் 24 மணி நேர உதவி எண்ணை (7827170170) மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சா் ஸ்மிருதி இரானி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களை காவல் துறை, மருத்துவமனைகள், மாவட்ட சட்ட சேவை ஆணையகம், உளவியல் சேவைகள் போன்ற தகுந்த அதிகாரிகளுடன் இணைப்பதே இந்த இணையவழி உதவி எண்ணின் நோக்கமாகும்.

காணொலி வாயிலாக இந்தச் சேவையை தொடக்கிவைத்த அமைச்சா் ஸ்மிருதி இரானி, தேசிய மகளிா் ஆணையத்தின் புதிய முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் ரேகா ஷா்மா, ஆணையத்தின் தற்போதைய புகாா் அமைப்பு முறையை இந்தப் புதிய உதவி எண் வலுப்படுத்துவதுடன், ஆதரவு மற்றும் ஆலோசனை தேவைப்படும் பெண்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் அளிக்கவும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினாா். பெண்களின் நல்வாழ்வுக்காக அயராது உழைக்கும் பிரதமா் நரேந்திர மோடி தங்களுக்கு எப்போதும் ஊக்கமளிப்பதாக அவா் தெரிவித்தாா்.

இந்த உதவி எண்ணில் பயிற்சி பெற்ற நிபுணா்கள் பணிபுரிவாா்கள். தில்லியில் உள்ள தேசிய மகளிா் ஆணையத்திலிருந்து இயங்கும் இந்த உதவி எண்ணை, 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதிலான பெண்கள் தொடா்பு கொள்ளலாம். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் எண்ம (டிஜிட்டல்) இந்தியா நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இந்த மின்னணு உதவி எண் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT