இந்தியா

‘சந்திரயான்-3’ எப்போது விண்ணில் ஏவப்படும்? மத்திய அமைச்சர் பதில்

DIN

சந்திரயான்-3 விண்கலம் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் என மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சந்திரயான்-3 விண்கலப் பணிகள் குறித்த விவரங்களை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.

“கரோனா காரணமாக சந்திரயான்-3 பணிகளில் சிறு தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், வீட்டிலிருந்து செய்ய முடிந்த பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது, தளர்வுகளுக்கு பிறகு சந்திரயான்-3 பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

கணினி செயல்திறன், விண்கல விரிவான சோதனை உள்ளிட்ட இறுதி கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தற்போதைய இயல்பு நிலையில் தொடர்ந்து பணி மேற்கொள்ளப்பட்டால், 2021ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும்” என்றார். 

முன்னதாக, 2008இல் அனுப்பப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் வெற்றி அடைந்த நிலையில், 2019இல் அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் முழு வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT