இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளன: மத்திய அரசு

28th Jul 2021 04:22 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் புதன்கிழமை தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீரின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை குறித்த விவரங்களை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க: செப். 20-ல் ஜே.என்.யு. நுழைவுத் தேர்வு; இன்று முதல் விண்ணப்பம்

“ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் எண்ணிக்கை 32 சதவீதம் குறைந்துள்ளது. கடைகள், வணிக செயல்பாடுகள், பொதுப் போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் இயல்பு நிலையில் செயல்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT

தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துதல் மற்றும் பயங்கரவாத அமைப்பினரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி

பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் செல்லாமல் இருக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.”

 

Tags : jammu kashmir terrorist
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT