இந்தியா

காஷ்மீர் : கனமழையால்  6 பேர் பலி , 40 பேர் மாயம் 

28th Jul 2021 11:04 AM

ADVERTISEMENT

காஷ்மீர் மாநிலத்தின்  கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹான்சன் கிராமத்தில்  ஏற்பட்ட கனமழையின் காரணமாக  வெள்ளப்பெருக்கு உருவானது. இதில் சிக்கி 6 பேர் வரை உயிரிழந்தனர். 

இதுகுறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஷபாத் உசைன் அளித்த தகவலில் " திடீர் கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி   ஹான்சன் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள் , இறந்தவர்களின் உடல்கள் மீட்டப்பட்டது.  படுகாயங்கள் அடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறோம் . மேலும் மாயமான 40 பேரை தேடும் பணியில் உள்ளூர் காவல்துறையும்  , தேசிய பேரிடர்  மீட்புப் படையும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள் என்றும் 25 கி.மீ வரை தேடுதல் பணியை மேற்கொண்டிருக்கிறோம் " எனத்  தெரிவித்தார்.

Tags : kashmir heavy rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT