இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மேகம் வெடித்து மழை: 8 பேர் பலி; 12 பேர் மீட்பு

28th Jul 2021 08:34 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் அருகே மேகம் வெடித்து பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 

வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் 12 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் மற்றும் கிஷ்த்வார் பகுதிகளில் மேகம் வெடித்துச் சிதறி மழை பெய்ததன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக குல்லு, மனிகாரன் பள்ளத்தக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags : Jammu and Kashmir Cloudburst
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT