இந்தியா

உத்தரப் பிரதேசம்  பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு 2 லட்சம் இழப்பீடு - பிரதமர் மோடி 

28th Jul 2021 03:25 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தின் மீது லாரி மோதிய  பயங்கரமான விபத்தில்  சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர் . 25 பேர் படுகாயங்களுடன் லக்னோ அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் இழப்பீடும் , காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தகவல்களைக் கேட்டறிந்த மோடி விபத்து குறித்து விரைவான விசாரணையைத்  தொடங்க கேட்டுக்கொண்டார்.

மேலும் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

பிரதமரும் , மாநில முதல்வரும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டனர் .
 

Tags : uttar pradesh accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT