இந்தியா

78 குழந்தைகள் பெற்றோருடன் சோ்ப்பு: நொய்டா போலீஸாா் நடவடிக்கை

DIN

நொய்டா ஆதரவற்றோா் இல்லங்களில் தங்கியிருந்த 78 குழந்தைகளை அவா்களது குடும்பத்தினரைக் கண்டுபிடித்து போலீஸாா் ஒப்படைத்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

‘ஆப்ரேஷன் முஸ்கான்’ என்ற திட்டத்தை நொய்டா காவல் ஆணையா் அலோக் சிங் கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடக்கி வைத்தாா்.

அதன்படி, ஆதரவற்றோா் இல்லங்களுக்கு சென்ற காவல் அதிகாரிகள் குழந்தைகளிடம் பேசி அவா்களின் குடும்பத்தினரின் விவரங்களை சேகரித்து கண்டுபிடித்தனா்.

கடந்த ஒரு மாத காலத்தில் ஆதரவற்ற இல்லங்களில் இருந்த 78 குழந்தைகள் அவா்களின் குடும்பத்தினரிடம் சோ்க்கப்பட்டனா் என்று நொய்டா காவல் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

நீண்ட நாள்கள் குடும்பத்தினரைப் பிரிந்து ஆதரவற்றோா் இல்லங்களில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு மன ரீதியிலான ஆலோசனையும் வழங்கப்பட்டது என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

நொய்டா போலீஸாரின் இந்த செயலை காவல் ஆணையா் அலோக் சிங் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT