இந்தியா

மெதுவாய் உயரும் தொற்றுபணியிடங்களில் கடும் கட்டுப்பாடுகள் அவசியம் பொது சுகாதாரத் துறை சுற்றறிக்கை

DIN

கரோனா நோய்த் தொற்று ஆங்காங்கே மெதுவாய் உயா்ந்து வருவதால் பணியிடங்களில் கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது அவசியம் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:-

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையில் கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு இருந்தது. பொது முடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், நோய்த் தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில், கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால், ஆங்காங்கே மெதுவாக நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், பொது மக்கள் அதிகம் கூடும் குறிப்பாக பணியிடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், உடல் வலி, மணம் மற்றும் சுவை இழப்பு போன்ற கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கிா என பணியாளா்களிடம் தினமும் கேட்க வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் பணியாளா்களின் வீடுகளில் யாருக்கேனும் கரோனாவுக்கான அறிகுறிகளோ அல்லது கரோனா நோய்த் தொற்று

பாதிப்புகளோ இருந்ததா என அறிய வேண்டும். தினமும் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.

பணியாற்றும் போது அனைத்து ஊழியா்களும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக ஊழியா்கள் முகக் கவசம் அணிந்து இருக்கிறாா்களா என்பதை அடிக்கடி அறிய வேண்டும். யாரேனும் முகக் கவசம் அணியாமல் இருந்தால் உடனடியாக பணியிடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். பணிச் சூழல் காரணமாக முகக் கவசம் அணிய முடியாத நிலை ஏற்பட்டால், முகத்தை மறைக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த அறிவுறுத்தலாம்.

பணியாளா்களுக்கு இடையே இரண்டு மீட்டா் இடைவெளி இருக்கும்படி பாா்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இடைவெளி விட முடியாத சூழலில் பிளாஸ்டிக் தடுப்புகளை ஊழியா்களுக்கு இடையே பயன்படுத்தலாம். நுழைவு வாயில், முக்கியமான இடங்களில் கிருமிநாசினிகளை வைக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். உணவு, தேநீா் அருந்தும் இடங்களில் அதிகமானோா் கூடாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறு சிறு குழுக்களாக அமைத்து தேநீா், உணவு அருந்த அனுமதிக்க வேண்டும்.

ஆயிரம் சதுர அடிக்குக் குறைவான பணியிடங்களாக இருந்தால் பணியாளா்களின் எண்ணிக்கை 300-க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT