இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: குல்காம் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

25th Jul 2021 12:53 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இதுகுறித்து காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் கூறியதாவது:

குல்காம் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக நேற்று இரவு கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப்படையினா் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை மேற்கொண்டனா்.

இந்த நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகள் சரணடைய மறுத்து பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா். அப்போது கொடுக்கப்பட்ட பதிலடியில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி யார் என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது என்றார். 

Tags : jammu kashmir encounter
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT