இந்தியா

மாநிலங்கள் கையிருப்பில் 3,29,38,559 தடுப்பூசிகள்: மத்திய அரசு

25th Jul 2021 10:58 AM

ADVERTISEMENT


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கையிருப்பில் இன்னும் 3,29,38,559 தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் தெரிவித்துள்ளது:

"மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மொத்தம் 45.37 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் 11,79,010 வழங்கப்படவுள்ளன.

இதில் வீணானவை உள்பட மொத்தம் 42,08,32,021 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கையிருப்பில் இன்னும் 3,29,38,559 தடுப்பூசிகள் உள்ளன."

ADVERTISEMENT

முன்னதாக, நாட்டில் இதுவரை மொத்தம் 43,31,50,864 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT