இந்தியா

வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகள்: முதல்வா்களுடன் உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆலோசனை

DIN

வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகள் குறித்து அந்த மாநிலங்களின் முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மேகாலய மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். அந்த மாநிலத் தலைநகா் ஷில்லாங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா், அஸ்ஸாம், மேகாலயம், அருணாசல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூா், மிஸோரம், சிக்கிம் ஆகிய 8 மாநிலங்களின் முதல்வா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது அஸ்ஸாம்-மிஸோரம் இடையே நிலவும் எல்லைப் பிரச்னை போன்று பல வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்னைகள் குறித்து அமித் ஷாவிடம் எடுத்துரைக்கப்பட்டது. சில வடகிழக்கு மாநிலங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 8 மாநிலங்களிலும் நிலவும் கரோனா சூழல் குறித்தும் அவரிடம் விளக்கமளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் 8 மாநிலங்களின் தலைமைச் செயலா்கள், காவல் துறை தலைவா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT