இந்தியா

பஞ்சாப் பிரச்னை ஓய்ந்தது: காங்கிரஸ் தலைமையின் அடுத்த குறி ராஜஸ்தான்

25th Jul 2021 12:50 PM

ADVERTISEMENT


பல ஆண்டுகளாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் பனிப்போர் நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியாக இருந்துவரும் உட்கட்சி பூசலைத் தீர்க்க அக்கட்சியின் மேலிடம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கிடையே நிலவிய பிரச்னைக்கு சமீபத்தில் தீர்வு காணப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தானை நோக்கி காங்கிரஸ் மேலிடம் தன் பார்வையை திருப்பியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டியுள்ளார். இருப்பினும், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் கூட்டப்படவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், ராஜஸ்தான் மேலிட பொறுப்பாளர் அஜய் மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூருக்கு சென்று முதல்வர் அசோக் கெலாட்டை நேற்று சந்தித்தனர். கடந்தாண்டு, கெலாட்டுக்கு எதிராக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் சச்சின் பைலட் வெளிப்படையாக போர்கொடி தூக்கினார்.

ADVERTISEMENT

பின்னர், சச்சின் பைலட்டின் குறைகள் தீர்த்துவைக்கப்படும் என கட்சி மேலிடம் அவரிடம் உறுதி அளித்தது. இதனிடையே, காங்கிரஸ் மாநில தலைவர் பதவியும் துணை முதல்வர் பதவியும் சச்சினுக்கு திருப்பி அளிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

Tags : congress rajasthan Ashok Gehlot Sachin Pilot
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT