இந்தியா

மாநிலங்களுக்கு இதுவரை 45.37 கோடி தடுப்பூசிகள் வழங்கல்: மத்திய அரசு தகவல்

DIN

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியத் தொகுப்பில் இருந்து இதுவரை 45.37 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள தகவலில், 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 45.37 கோடிக்கு மேல் (45,37,70,580) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 11,79,010 டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பில் உள்ளன. 

அதேநேரத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, மாநிலங்களில் 42,08,32,021 தடுப்பூசிகள் இருப்பில் அல்லது பயன்படுத்தப்படாமல் உள்ளன. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவச தடுப்பூசியை வழங்கி வருகிறது. ஜூன் 21 முதல் தொடங்கப்பட்ட புதிய தடுப்பூசி இயக்கத் திட்டத்தின்படி தடுப்பூசி போடப்படுவது அதிகரித்துள்ளது. 

மேலும் புதிய திட்டத்தின்படி மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து 75% தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT