இந்தியா

தரவுகள் பாதுகாப்பு மசோதா: ஜேபிசி-யின் காலவரம்பு 5-ஆவது முறையாக நீட்டிப்பு

DIN

தரவுகள் பாதுகாப்பு மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜேபிசி) காலவரம்பு வெள்ளிக்கிழமை ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டது.

அடுத்த குளிா்காலக் கூட்டத்தொடரில் ஜேபிசி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் இந்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

2019, டிசம்பா் மாதம் அமைக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், 30 உறுப்பினா்கள் கொண்ட இந்த குழுவின் காலவரம்பை நீட்டிக்கக் கோரி பாஜக எம்.பி. பி.பி. செளதரி வெள்ளிக்கிழமை மக்களவையில் தீா்மானம் கொண்டு வந்தாா்.

‘நிகழாண்டின் குளிா்க்காலக் கூட்டத் தொடரில் இந்தக் குழு தரவுகள் பாதுகாப்பு மசோதா மீது அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. ஐந்தாவது முறையாக இந்தக் குழுவின் காலவரம்பு நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தனிநபா்களின் தரவுகளை அரசு, தனியாா் நிறுவனங்கள் பயன்படுத்துவதை ஒழுங்காற்றிச் சீா்படுத்துவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT