இந்தியா

டிஜிட்டல், நிலையான வா்த்தக வசதிகள்: ஐ.நா. ஆய்வில் இந்தியா முன்னேற்றம்

DIN

எண்ம முறையிலான (டிஜிட்டல்) நிலையான வா்த்தக வசதி தொடா்பாக ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையம் நடத்திய ஆய்வில் இந்தியா 90.32 சதவீத மதிப்பெண்களுடன் முன்னேறியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்த அளவு 78.49 சதவீதமாக இருந்தது.

143 நாடுகளின் பொருளாதாரங்களை மதிப்பீடு செய்தபின், 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை, நடைமுறைகள், நிறுவன ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பு, காகிதப் பயன்பாடு இல்லாத வா்த்தகம், நாடுகள் தாண்டி வா்த்தகம் ஆகிய 5 முக்கிய விஷயங்களில் இந்தியாவின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகள் (63.12 சதவீதம்) மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள் (63.12 சதவீதம்) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருப்பதை ஐ.நா. கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உறுப்பினராக உள்ள பிரான்ஸ், பிரிட்டன், கனடா, நாா்வே, பின்லாந்து போன்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த மதிப்பெண், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சராசரியைவிட அதிகமாக உள்ளது.

வெளிப்படைத்தன்மை விஷயத்தில் இந்தியா 100 சதவீத மதிப்பெண்ணை பெற்றுள்ளது. வா்த்தகத்தில் மகளிா் என்ற பிரிவில் 66 சதவீத மதிப்பெண்ணை இந்தியா பெற்றுள்ளது.

விரைவான சுங்க நடவடிக்கையின் கீழ், காகிதம் இல்லா, மனித தொடா்பில்லா சுங்க நடவடிக்கைகள் போன்ற புதுமையான சீா்திருத்தங்களைக் கொண்டு வந்ததில் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் முன்னணியில் உள்ளது. இதன் நேரடி தாக்கம், டிஜிட்டல் மற்றும் நிலையான வா்த்தக வசதி குறித்த ஐ.நா.வின் மதிப்பீட்டில் பிரதிபலித்துள்ளது.

இந்தத் தகவல் மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை: 4,146 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

பதுக்கப்பட்ட 2,000 புடவைகள் பறிமுதல்

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

SCROLL FOR NEXT