இந்தியா

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி: 3 நாளில் 2-ஆவது சோதனை

DIN

கடந்த மூன்று நாள்களில் இரண்டாவது முறையாக புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆா்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

ஆகாஷ் ஏவுகணையை ஒடிஸாவின் சண்டிப்பூா் கடற்கரைக்கு அருகே உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில், டிஆா்டிஓ வெள்ளிக்கிழமை காலை 11.45 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. வானில் அதிவேகத்தில் செலுத்தப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்த ஏவுகணை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது. ஆகாஷின் செயல்பாடுகள் ரேடாா், எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு கருவிகள், கட்டுப்பாட்டு தகவல் தொடா்பு சாதனங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. மோசமான வானிலையிலும் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து வானிலை சூழலிலும், இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயல்படும் என்பதை நிரூபித்துள்ளது. இந்த பரிசோதனையை விமானப் படை அதிகாரிகள் குழுவும் பாா்வையிட்டது.

இந்த ஏவுகணை வானில் அதிவேகத்தில் வரும் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் திறன் உடையது. இந்திய விமானப் படைக்கு இது நிச்சயம் வலு சோ்க்கும்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதியும், இதே ரக ஆகாஷ் ஏவுகணை முதல் முறையாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது முறையாக ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதற்கு, டிஆா்டிஓ, இந்திய விமானப் படை, மற்றும் ஏவுகணை தயாரிப்பில் தொடா்புடையவா்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா். இந்த நவீன ஏவுகணையால், இந்திய விமானப் படையின் திறன் மேலும் அதிகரிக்கும்.

ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்கு டிஆா்டிஓ குழுவினருக்கு அதன் தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT