இந்தியா

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் பிளிங்கன் வரும் 27-இல் இந்தியா வருகை

DIN

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வரும் 27-ஆம் தேதி இந்தியா வர உள்ளாா்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அவா், பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேசுகிறாா். ஜெய்சங்கா் - பிளிங்கன் கடந்த ஓராண்டில் 3 முறை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றனா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக வரும் 27-ஆம் தேதி இந்தியா வருகிறாா். முதல் நாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறாா். ஜூலை 28-இல் பிரதமா் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை அவா் சந்திக்க உள்ளாா்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஆன்டனி பிளிங்கன் மேற்கொள்ளும் முதல் இந்திய சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது, பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள், இந்தியாவின் கரோனா நிலவரம், ஆப்கன் நிலவரம், ஐ.நா. சபையில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம் பொறுப்பேற்ற பிறகு இந்தியா வரும் இரண்டாவது மூத்த அமைச்சா் பிளிங்கன் ஆவாா். முன்னதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் இந்தியாவுக்கு கடந்த மாா்ச் மாதம் பயணம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT