இந்தியா

கர்நாடக அமைச்சரவையில் மாற்றம்?

24th Jul 2021 02:47 PM

ADVERTISEMENT

கர்நாடக தலைமையில் மாற்றம் இருந்தாலும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அம்மாநில அமைச்சர் நிரணி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக நான்காவது முறையாக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறவுள்ளது. பாஜகவில் 75 வயதுக்கு மேலானவர்கள் அரசியல் பதவி வகிக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி. இருப்பினும், எடியூரப்பாவுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டது.

இதனிடையே, இந்த மாத இறுதியில் எடியூரப்பா ராஜிநாமா செய்வார் என தகவல் வெளியானது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஆட்சி கவிழ்ப்பின் போது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்து விலகி பாஜகவில்
இணைந்த 17 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

எடியூரப்பா ராஜிநாமா செய்யும்போது, இவர்களின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த 17 அமைச்சர்களின் பதவி பறிக்கப்படாது என கர்நாடக சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் நிரணி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமைச்சரவை மாற்றம் குறித்த செய்திகளை நாளிதழ்களில் படித்துதான் தெரிந்து கொண்டேன். முதலமைச்சர் உள்பட  இதுகுறித்து யாரும் என்னிடம் பேசவில்லை. எனக்கு தெரிந்தவரை, பாஜக ஆட்சி அமைப்பதற்கு உதவியாக இருந்த 17 பேர் பதவியில் தொடர்வார்கள்" என்றார்.

அடுத்த முதலமைச்சராக வருவதற்கு நீங்கள் முயற்சி செய்வதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, "முதலமைச்சராக வருவதற்கு 120 எம்எல்ஏக்களுக்கும் விருப்பம் உள்ளது. நான் எப்போதும் முதலமைச்சர் பதவிக்காக ஆசைப்பட்டதில்லை. கட்சி தலைமையும் முதலமைச்சரும்தான் எனக்கு அமைச்சர் பதவி வழங்கினர்" என்றார்.

Tags : yediyurappa Karnataka Cabinet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT