இந்தியா

இன்று இரவு மீன்கள் சாப்பிட போகிறோம்: வெள்ளி வென்ற மீராபாயின் தாயார்

24th Jul 2021 03:59 PM

ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்ற நிலையில், அவரது சொந்த ஊர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலாவிலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள நோங்போக் கச்சிங் கிராமம் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற மீராபாய் சானுவின் சொந்த கிராமமான கச்சிங்கில் அவரது உறவினர், நண்பர்கள், அண்டை வீட்டார் என அனைவரும் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியை தொலைக்காட்சியில் காண சானுவின் வீட்டில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் அமர்ந்திருந்தனர். கையை கட்டி கொண்டும் கண்களை மூடியபடியும் பெரு மூச்ச விட்ட படியும் சானு பளு தூக்கியதை கண்டு ரசித்தனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து சானுவின் தாயார் சைகோம் டோம்பி தேவி கூறுகையில், "இன்று இரவு மீன்கள் சாப்பிட போகிறோம். நாங்கள் சைவ பிரியர் தான், ஆனால், இன்று மட்டும் விதிவிலக்கு. இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கிவிட்டார். மிக உற்சாகமாக உள்ளது. அவர் தங்கம் வாங்கேவே விரும்பினோம். 

ஆனால், இந்த வெள்ளியே தங்கம் போன்றது. எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. நாடும் பெருமை படும் என நினைக்கிறோம்" என்றார். மீராபாயின் கிராமத்தில் கரோனா பாதிப்பு உள்ளதால் வீட்டிக்குள் பலரை அனுமதிக்கவில்லை.


 

Tags : olympics Tokyo Olympics mirabai chanu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT