இந்தியா

மீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்: பிரதமர் மோடி பெருமிதம்

24th Jul 2021 03:12 PM

ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய் சானுவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இதை விட மகிழ்ச்சியான தொடக்கத்தை யாரும் கேட்டிருக்க முடியாது. சானுவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவே மகிழ்ச்சியில் உள்ளது. பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் பக்கத்தில், "டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கைத்தை வென்று பதக்க வேட்டையை தொடங்கியுள்ள மீராபாய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Tokyo Olympics olympics modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT