இந்தியா

மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 4 பேர் பலி

24th Jul 2021 09:30 PM

ADVERTISEMENT

மும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் லிப்ட் அறுந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள். 
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் வொர்லி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் லிப்ட் இன்று திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த 4 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தனார். 
உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாரம் தாங்காமல் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். 
முன்னதாக நேற்று மும்பை சிவாஜி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : mumbai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT