இந்தியா

காஷ்மீர் : 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

24th Jul 2021 11:11 AM

ADVERTISEMENT

காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை நடத்திய தாக்குதலில் உயிரழந்தனர்.

காவல்துறைக்கு  தீவிரவாத தாக்குதல்கள்  பற்றிய தகவல்கள்   வந்த நிலையில் ஷோக்பாபா வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இருந்தவர்கள் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளைச்  சுற்றிவளைத்தனர் .

இதை எதிர்பார்க்காத தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களை தொடர்ந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் இறுதியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பலியான இருவரைப் பற்றிய எந்தத்  தகவலும் இல்லை என்பதால்  அதை பற்றிய விசாரணையில் இருப்பதாகவும் அங்கிருந்து சில ஆயுதங்களையும் பறிமுதல்  செய்ததாகவும்  காவல்துறை தெரிவித்திருக்கிறது .

ADVERTISEMENT

Tags : Kashmir காஷ்மீர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT