இந்தியா

ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

24th Jul 2021 05:12 PM

ADVERTISEMENT

ஐசிஎஸ்இ 10 மற்றும் ஐஎஸ்சி 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

ஐசிஎஸ்இ 10 மற்றும் ஐஎஸ்சி 12 வகுப்புகளுக்கான் தேர்வு முடிவுகளை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது.

ஐசிஎஸ்இ பாட திட்டத்தின் மூலம் தேர்வு எழுதியவர்களில் 99.98 சதவிகிதத்தினரும் ஐஎஸ்சி-யில் 99.76 சதவிகிதத்தினரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

ஐசிஎஸ்இ தேர்வுகளில் தில்லி தேசிய தலைநகர் பகுதி 100 சதவிகிதத்தை பெற்றுள்ளது. அதேபோல், ஐஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வுகளில், 99.93 தேர்ச்சி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்தாண்டு, 2,909 மாணவர்களும் 2,554 மாணவிகளும் ஐசிஎஸ்இ தேர்வுகளை எழுதினர். ஐஎஸ்சியை பொறுத்தவரை, 1,418 மாணவர்களும் 1,393 மாணவிகளும் தேர்வுகளை சந்தித்தனர்

இந்தாண்டு, கரோனா இரண்டாம் அலை காரணமாக 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வுகளை சிஐஎஸ்சிஇ ரத்து செய்தது. மாற்று மதிப்பீட்டு முறை மூலம் தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : ICSE CISCE ISE Exam Results
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT