இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 5 பேர் பலி: 18 பேர் படுகாயம்

24th Jul 2021 04:30 PM

ADVERTISEMENT

மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் இடி மின்னலால் பலியானவர்களின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி யுரேஹா, பிபரியா, ச ouமுகா மற்றும் சிம்ரா குர்த் உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : Madhya pradesh lightning
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT