இந்தியா

ஆந்திரத்தில் 260 கிலோ கஞ்சா பறிமுதல்

24th Jul 2021 12:07 PM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம்  கடப்பா மாவட்டத்திற்குள் கடத்தி வரப்பட்ட 260 கிலோ எடைகொண்ட கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ஒரு கார் , 4 செல்போன்கள் மற்றும் 38,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மாவட்டக்  காவல்துறை  கண்காணிப்பாளர் கே.கே.என் அன்புராஜன் பத்திரிக்கையாளர்களிடம் அளித்த தகவலில் , " சட்டவிரோதமாக கடப்பா மாவட்டத்திற்குள் கடத்திவரப்பட்ட கஞ்சா சிறிய பைகளில் கிராம் கணக்கில் அடைத்து விற்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களே அதிக விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள் என தெரிவித்ததோடு கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்களை தொடர்ந்தது கண்காணித்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார் .

பிடிபட்டவர்களின் பெயர்கள்   ராமு , தேஜா , ரங்காரெட்டி , நீலகந்தேஸ்வர் மற்றும் நாகேஸ்வர ராவ் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags : கஞ்சா cannabis
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT