இந்தியா

உலகை விட்டு சென்ற வயதான மாணவி

23rd Jul 2021 02:30 PM

ADVERTISEMENT

கேரள கொல்லம் நகரில் உள்ள பிரகுலத்தை சேர்ந்தவர் பாகீரதி அம்மா. இவருக்கு வயது 107. உலகின் வயதான மாணவியான இவர் இன்று காலமானார். வயது மதிர்ந்த நிலையிலும், கற்று கொள்வதில் ஆர்வம் மிகுந்த அவரின் மூலம் கல்வியறிவு குறித்த வழிப்புணர்வை ஏற்படுத்த கேரள அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவந்தது.

இதனிடையே, இரு கனவுகளை நிறைவேற்ற முடியாமலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. 7ஆம் வகுப்புக்கு நிகரான தேர்வில் வெற்றிபெற்று பத்தாம் வகுப்பு தேர்வை எழுத வேண்டும் என்பதையும் நடிகர் சுரேஷ் கோபியுடன் நேரில் பேசுவதையும் அவர் கனவாக கொண்டு இருந்தார்.

நான்காம் வகுப்புக்கு நிகரான தேர்வில் 75 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று பாகீரதி அம்மா வெற்றிபெற்றதற்கு, பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டினார். பாகீரதி அம்மாவின் தோழியான ஷெர்லியும் அண்டை வீட்டரான சாரதாவும் அவருக்கு தொடர்ந்து கற்பித்துவந்தனர்.

முதிர்ந்த வயதிலும் கல்வி கற்பதை இலக்காக வைத்திருந்த பாகீரதி அம்மாவுக்கு உறுதுணையாக அவரின் இளைய மகள் தங்கமணி பிள்ளையும், திருக்கருவ பஞ்சாயத்தை சேர்ந்த அனைவரும் இருந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே, அம்மாவின் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், இன்று அவரின் உயிர் பிரிந்தது.

ADVERTISEMENT

Tags : kerala oldest student Bhageerathi Amma
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT