இந்தியா

இமாச்சல் பிரதேசத்தில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு

23rd Jul 2021 09:01 PM

ADVERTISEMENT

இமாச்சல் பிரதேசத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதியிலிருந்து 10 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி அனுமதியளித்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. முதல் இரண்டு அலைகளை எதிர்கொண்ட நிலையில் மூன்றாம் அலையும் வரும் என்று நிபுணர்கள் கணித்திருப்பதால் பள்ளிகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டி வந்தன.

பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதியிலிருந்து 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. 

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

Tags : himachal pradesh schools
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT