இந்தியா

மகாராஷ்டிர நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி

23rd Jul 2021 10:06 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரையில், மகாராஷ்டிரத்தின் ராய்காட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ மகாராஷ்டிர ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனையடைந்தேன். உறவினர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். 

கனமழை காரணமாக மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டுள்ள நிலவரம் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.’’ என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : PMMODI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT