இந்தியா

மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: நிலச்சரிவில் 44 பேர் பலி

23rd Jul 2021 03:44 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பல்வேறு நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகியுள்ளனர்.

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த காரணத்தால் மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் பல இடங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ராய்கட் மாவட்டம் தலாய் மற்றும் மலாய் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 30க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர்  மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பல்வேறு இடங்களுக்கு செல்லும் சாலைகளும் பாலங்களும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் படையினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே சதாரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 8 பேர் பலியாகியுள்ளதாகவும் 2 பேரைக் காணவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags : maharastra flood landslide
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT