இந்தியா

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் மேல்முறையீட்டு மனு தள்ளபடி

23rd Jul 2021 04:24 PM

ADVERTISEMENT

அமேசான், பிளிப்கார்ட ஆகிய நிறுவனங்கள் இணைய சேவையில் கொடிகட்டி பறந்துவருகிறது. இந்நிறுவனங்கள் போட்டியை தடுக்கும் வகையில் தள்ளுபடிகளை வழங்கியதாகவும் குறிப்பிட்ட விற்பனையாளர்களுக்கு மட்டும் ஆதாரவாக செயல்பட்டதாகவும் சில்லறை வர்த்தகர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரிக்க இந்திய தொழில்போட்டி ஆணையம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவந்தது.

இந்த விவகாரத்தில் இந்திய தொழில்போட்டி ஆணையத்திடம் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காரணத்தால் விசாரணை மேற்கொள்ளப்படாமல் இருந்தன. பின்னர், விசாரணையை தொடங்க கர்நாடக உயர் நீதிமன்றம்  ஜூன் மாதம் அனுமதி வழங்கியது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமேசான், பிளிப்கார்ட ஆகிய நிறுவனங்கள் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறுகையில், "இந்திய தொழில்போட்டி ஆணையத்தின் நடவடிக்கையை முடிக்கவிடாமல் செய்தவற்கே இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்றார்.
 

Tags : Karnataka flipkart Amazon Karnataka High Court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT