இந்தியா

டிவிட்டர் நிர்வாகிக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு: கர்நாடக உயர்நீதிமன்றம்

23rd Jul 2021 05:56 PM

ADVERTISEMENT

சமூக நல்லிணக்கத்தை குழைக்கும் விதமாக பொய்யான விடியோ பதிவிடப்பட்டதாக எழுந்த புகாரில், டிவிட்டர் இந்திய நிர்வாகி நேரில் ஆஜராவதிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம், லோனி நகரில் அப்துல் சமத் எனும் இஸ்லாமிய முதியவரை காவி உடை அணிந்து வந்த ஐந்து பேர் சரமாரியாகத் தாக்கினர். 'ஜெய் ஸ்ரீராம்' 'வந்தே மாதரம்' என முழக்கமிடாததால்தான் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பதிவிடப்பட்ட விடியோ பொய்யானவை என்றும் சமூக நல்லிணக்கத்தை குழைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதாகவும் கூறி, டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மணிஷ் மகேஷ்வரி, விடியோவை பகிர்ந்த பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியது. 

இதனிடையே,இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மணிஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்த நீதிபதி ஜி. நரேந்தர், மணிஷ்க்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்து நீதிபதி கூறுகையில், "தான் குற்றம்சாட்டப்பட்டவர் இல்லை என்றும் தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் சட்ட விரோதமானது என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார். அவரின் வாதம் சரியானதே. அவரின் வாக்குமூலத்தை பெற வேண்டும் என்றால் விடியோ கான்பரன்சிங் மூலம் பெற்று கொள்ளலாம்" என உத்தரவிட்டார்.

Tags : uttar pradesh Karnataka High Court Twitter India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT