இந்தியா

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

23rd Jul 2021 03:56 PM

ADVERTISEMENT

தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு(டி.ஆா்.டி.ஓ.) வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதித்தது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாதுகாப்புத் துறையைச் சோ்ந்த நிறுவனங்களுடன் இணைந்து டிஆர்டிஓ தயாரித்துள்ள ஆகாஷ் என்ஜி ஏவுகணை ஒடிஸா கடற்கரைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

சோதனையின் போது திட்டமிடப்பட்ட 30 கி.மீ தூர இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

ADVERTISEMENT

2.5 மாக் வேகத்தில் செல்லக்கூடிய ஆகாஷ் ஏவுகணை(ஆகாஷ்-என்.ஜி.) தரைப்பரப்பிலிருந்து 60 கி.மீ. தொலைவு வரை விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 நாள்களில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மேற்கொண்ட மூன்றாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

Tags : DRDO Akash NG Misslie
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT