இந்தியா

'தடுப்பூசி செலுத்தியவர்கள் பாகுபலி போல வலுவடைந்துள்ளார்கள்': மோடி

19th Jul 2021 11:14 AM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் பாகுபலி போல வலுபெற்றுள்ளார்கள் என்று பிரதமர் மோடி திங்கள்கிழமை பேசியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை கூடுவதற்கு முன்பாக பிரதமர் மோடி மழையில் குடை பிடித்தபடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசியதாவது,

நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 40 கோடி பேர் கரோனாவுக்கு எதிரான போரில் பாகுபலி போல வலுப்பெற்றுள்ளார்கள். மேலும், பலருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. தொற்று நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் தொற்று நோய் குறித்த ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற விரும்புகிறோம். 

ADVERTISEMENT

கரோனா தொற்றை முன்னுரிமை அடிப்படையில் விவாதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். அனைத்து உறுப்பினர்களிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துகளை பெறுவதன் மூலம் குறைபாடுகளை சரிசெய்து, தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் புதிய அணுகுமுறையுடன் அனைவரும் ஒன்றாக முன்னேறி செல்லமுடியும்.

இரு அவைகளிலும், அனைத்து உறுப்பினர்களும் முக்கியமான கேள்விகளை கூர்மையாக கேட்கவேண்டும், அதற்கு அரசு தரப்பில் பதிலளிக்க ஒத்துழைக்க வேண்டும். இது ஜனநாயகத்தை உயர்த்தி, மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும். மேலும், நமது வளர்ச்சியை வேகப்படுத்தும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT