இந்தியா

கேரளத்தில் மேலும் இருவருக்கு ஜிகா பாதிப்பு

19th Jul 2021 08:40 PM

ADVERTISEMENT


கேரளத்தில் மேலும் இரண்டு பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் ஜிகா பரவுகிறது. காய்ச்சல், மூட்டு வலி, உடலில் தடிப்பு உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இதுதொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேரள அரசு ஏற்கெனவே மக்களை அறிவுறுத்தியுள்ளது. எனினும், கடந்த சில நாள்களாக அங்கு ஜிகா பாதிப்பு உள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மாநிலத்தில் மேலும் இரண்டு பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி வீணா ஜார்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தது:

ADVERTISEMENT

"கேரளத்தில் மேலும் இரண்டு பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

Tags : Zika
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT