நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 20) ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி விநியோகம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று (ஜூலை 19) தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
ADVERTISEMENT
இதில், நாடாளுமன்ற அவையை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும் தொடர் அமளி காரணமாக இன்று நடைபெற்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரண்டும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.