இந்தியா

மணிப்பூர் சமூக ஆர்வலரை 5 மணிக்குள் விடுவிக்க உச்ச நீதிமன்றம் கெடு

19th Jul 2021 02:30 PM

ADVERTISEMENT

சேத விரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லெய்சோம்பம் எரேண்ட்ரோவை இன்று மாலை 5 மணிக்குள் விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

மாட்டு சாணம், மூத்திரம் ஆகியவை கரோனாவை குணப்படுத்துவதாக மணிப்பூர் பாஜக தலைவரான சைகோம் திகேந்திர சிங் கருத்து தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

இதனிடையே, மாட்டு சாணம், மூத்திரம் ஆகியவை பயன் தரவில்லைபோலும் என திகேந்திர சிங்கின் இறப்பு குறித்து மணிப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் லெய்சோம்பம் எரேண்ட்ரோ, தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.

எரேண்ட்ரோவின் கருத்துகள் வெறுப்பூட்டும் வகையில் உள்ளது என மணிப்பூர் பாஜக துணை தலைவர் உஷாம் தேவனும் பொதுச் செயலாளர் பிரேமானந்தா மீட்டியும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, தேச விரோத சட்டத்தின் கீழ் எரேண்ட்ரோ மற்றும் பத்திரிகையாளர் கிசோரேச்சந்திர வாங்கேம்
கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதற்கு எதிராக எரேண்ட்ரோவின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்ச நீதிமன்றம், மாலை 5 மணிக்குள் எரேண்ட்ரோ விடுவிக்கப்பட வேண்டும் என கெடு விதித்துள்ளது. இதுகுறித்து நீதிபதிகள் டி. ஒய். சந்திரசூட், எம். ஆர். ஷா ஆகியோர் கொண்ட அமர்வு, "மனுதாரரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது என்பது அரசியலமைப்பு பிரிவு 21க்கு எதிரானதாகும். தனிப்பட்ட சுதந்திரம், வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றில் தலையீடுவது போன்றதாகும். 

எனவே, ஆயிரம் ரூபாய் செலுத்தி சொந்த பிணையில் அவர் இன்று மாலை 5 மணிக்குள் விடுவிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டது. 

முன்னதாக, கடந்த 2020 ஜூன் மாதம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகக் கூறி தேச விரோதச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், இவ்வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகள் ஆனப் பிறகும் தேச விரோச சட்டம் தேவையா? என உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT