இந்தியா

பஞ்சாப் உள்கட்சி பூசல்: முன்னாள் காங். தலைவர் கருத்து

19th Jul 2021 04:25 PM

ADVERTISEMENT

பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையை காக்க வேண்டியது நமது கடமை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுஜில் ஜாகர் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் திரிபத் ராஜேந்திர சிங் பாஜ்வாவை நவ்ஜோத் சிங் சித்து நேரில் சென்று சந்தித்தார்.

அவருடன் சென்ற முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் சுஜில் ஜாகர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, ''திரிபத் ராஜேந்திர சிங் உடன் ஆலோசனை நடத்தவில்லை. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் நியமிக்கப்பட்டதை வரவேற்கும் விதமாக தேநீர் விருந்து அளிப்பதற்கே திரிபத் அழைப்பு விடுத்திருந்தார். 

ADVERTISEMENT

பஞ்சாப் காங்கிரஸ் ஒற்றுமையாகவே உள்ளது. பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மிகப்பெரிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அவர்களது நம்பிக்கையை மேலும் பலப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது'' என்று கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT