இந்தியா

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: பியூஷ் கோயல் கண்டனம்

19th Jul 2021 01:44 PM

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு பாஜக மாநிலங்களவைத் தலைவர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து பியூஷ் கோயல் கூறியதாவது,

நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அசாதாரண சுழலை எதிர்கொண்டோம். மாநிலங்களவையில், அவைத் தலைவரின் உரையின்போது கூட இடையூறு செய்தார்கள் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், பெட்ரோல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பவுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT