இந்தியா

பாஜக மாநிலங்களவை துணைத் தலைவராகிறார் முக்தார் அப்பாஸ் நக்வி

19th Jul 2021 04:08 PM

ADVERTISEMENT

பாஜகவின் மாநிலங்களவை துணை தலைவராக முக்தார் அப்பாஸ் நக்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக மாநிலங்களவை குழு தலைவராக இருந்த மத்திய அமைச்சர் தாவா் சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, பாஜக மாநிலங்களவைக் குழு துணை தலைவராக இருந்த பியூஷ் கோயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், துணை தலைவராக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் நக்வி நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து நன்கறிந்தவர். 2014 முதல் 19 வரை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையச்சராக பதவி வகித்தார்.

கரோனா இரண்டாம் அலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT