இந்தியா

மக்களை வேவுபார்க்கவா டிஜிட்டல் இந்தியா?: ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் காங். கேள்வி

19th Jul 2021 07:47 PM

ADVERTISEMENT

டிஜிட்டல் இந்தியா மக்களை கண்காணிப்பதற்கா என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், கேபினட் அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரது செல்லிடப்பேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

படிக்க: ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் பட்டியலில் 40 இந்திய ஊடகவியலாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானது.

ADVERTISEMENT

இந்நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, மக்களை கண்காணிப்பதற்கு டிஜிட்டல் இந்தியா என்று வினவியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியாவை முன்னெடுத்து வருகிறார். ஆனால் இன்று இந்தியா வேவுபார்க்கப்படுகிறது.

சேகரிக்கப்படும் தரவுகள் குற்றச் செயல்கள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக முடிவுகளை எடுக்க குறிப்பிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் என்று தரவு சேமிக்கும் நிறுவனமான என்.எஸ்.ஓ. தெரிவித்துள்ளது. 

ஆனால் பெகாசஸ் மூலம் பாஜக ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களையும், செயல்படுபவர்களையும் வேவுபார்க்க பயன்படுகிறது என்று குற்றம் சாட்டினார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT