இந்தியா

இந்திரா காந்தி தேசிய உயிரியல் பூங்கா இன்று திறப்பு 

19th Jul 2021 12:56 PM

ADVERTISEMENT

விசாகப்பட்டினம் : கரோனா பாதிப்பால் மூடப்பட்டிருந்த இந்திரா காந்தி வன உயிரியல் பூங்கா மற்றும்  மிருகக்காட்சி சாலை கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன்   இன்று திறக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆந்திர அரசு  " இந்திரா காந்தி உயிரியல் பூங்கா மற்றும்  மிருகக்காட்சி சாலை இரண்டும் திறக்கப்படுவதாகவும் மத்திய அரசின் கரோனா நோய்த் தடுப்பு வழிகாட்டு  நெறிமுறைகளின் படி   பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்" எனத்  தெரிவித்திருக்கிறது.

மேலும்  இன்று மிருகக்காட்சிசாலை  திறக்கப்பட்டாலும் நாளை (செவ்வாய்க் கிழமை) முதலே பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்படும் என மிருகக்காட்சி சாலையின் பராமரிப்பாளர்  நந்தனி சலாரியா அறிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT