இந்தியாவில் புதிதாக 38,164 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,164 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,11,44,229ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 499 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,14,108 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று 38,660 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,03,08,456 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 4,21,665 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை 40,64,81,493 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 14,63,593 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இதுவரை மொத்தம் 44,54,22,256 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று வல்லுநா்கள் கூறியுள்ளனா்.