இந்தியா

ஸ்டேன் சுவாமி மீது பெருமதிப்பு உண்டு: மும்பை நீதிமன்றம்

19th Jul 2021 06:54 PM

ADVERTISEMENT

ஸ்டேன் சுவாமி மீது பெரு மதிப்பு உள்ளது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

எல்கர் பரிஷத் வழக்கில் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் ஆர்வலரான ஸ்டேன் சுவாமி ஜூலை 5 ஆம் தேதி மரணம் அடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக, பாதிரியார் ஸ்டேன் சுவாமி பிணைக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. அப்போது, எஸ். எஸ். ஷிண்டே மற்றும் என். ஜே. ஜமதார் ஆகியோர் கொண்ட அமர்வு, ஸ்டேன் சுவாமி அற்புதமான மனிதர் என்றும் அவரின் சேவையின் மீது பெரு மதிப்பு உள்ளது என்றும் குறிப்பட்டது..

இதுகுறித்து நீதிமன்றம் மேலும் கூறுகையில், "பொதுவாக எங்களுக்கு நேரம் இருப்பதில்லை. இருப்பினும், சுவாமியின் இறுதி சடங்கை பார்த்தோம். இது கண்ணியத்துடன் நடத்தப்பட்டது. சட்ட ரீதியாக, அவருக்கு எதிராக பல்வேறு விவகாரங்கள் உள்ளன. இருப்பினும், அவர் சிறப்பான சேவைகளை செய்துள்ளார். அதனால், அவர் மீது பெரு மதிப்பு உள்ளது.

ADVERTISEMENT

பல்வேறு வழக்குகளில் சிக்கி விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளது குறித்து வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். விசாரணை நியாயமாக நடத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT