இந்தியா

ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

19th Jul 2021 08:32 PM

ADVERTISEMENT


ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக விளக்கமளிக்கவில்லை என்றால், அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல் போன்று இது பாஜகவிற்கு பெரும் சோதனையாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார். 

படிக்க: 'பெகாசஸ் ஸ்பைவேர் குறித்த கட்டுரை ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி'

இது தொடர்பாக தமது சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ஒட்டுக்கேட்பு விவகாரம் மிகவும் பெரிய பிரச்னை. தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு தரவுகளை சேகரித்து வரும் இஸ்ரேல் நிறுவனத்துடன் எந்தவித  தொடர்பும் இல்லை என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல் போன்று இது பாஜகவிற்கு பெரும் சோதனையாக மாறும் என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT