இந்தியா

மாநிலங்களிடம் 2.60 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: சுகாதாரத்துறை

19th Jul 2021 12:16 PM

ADVERTISEMENT

மாநிலங்களின் கையிருப்பில் 2.60 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 42,15,43,730 கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 39,55,31,378 கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் கையிருப்பில் 2,60,12,352 தடுப்பூசிகள் உள்ளன. 

ADVERTISEMENT

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 38,164 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT